பளபளன்னு ரோடு.. சென்னை மாநகராட்சியா இப்படி.. என்ன பதில் எல்லாம் வருது.. ஆச்சர்யமாக இருக்கே!
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரம் முழுவதும் சாலைகள் விறுவிறுப்பாக இரவு பகலாக அமைக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்குள் சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளதால் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சென்னை மாநகரில் இரவில் தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலை அமைக்கப்பட்ட தெருவின் பெயர், ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் வகை, பொறியாளர் யார் என அனைத்து விவரங்களையும் சென்னைமாநகராட்சி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

இதன் மூலம் தினமும் சென்னையில் எங்கெல்லாம் சாலை அமைக்கப்படுகிறது என்பதை எளிதாக மக்களால் அறிந்து கொள்ள முடியும். பல நாட்களாக பல்வேறு வேலை நடந்து வந்த சாலைகள் எல்லாம் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் விறுவிறுப்பாக அமைக்கப்படுகின்றன. சென்னையின் 14 மண்டலங்களிலும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
அக்டோபர் 4ம் தேதியான நேற்று மண்டலம் 6ல் உள்ள பேசின் பவர் ஹவுஸ் சாலை, புளியந்தோப்பு ஹைரோடு, மண்டலம் 13ல் உள்ள சர்தார் பட்டேல் ரோடு, மண்டலம் 11ல் உள்ள ஸ்ரீதேவி குப்பம் மெயின்ரோடு, மண்டலம் 13ல் உள்ள கல்கி குப்பம் சாலை (திருவான்மியூர் சிக்னல் அருகே), மண்டலம் ஆறில் உள்ள தேவநாதன் சாலை, மண்டலம் 13ல் உள்ள பெசன்ட் அவின்யூ (அவ்வை இல்லம் அருகே), மண்டலம் 4ல் உள்ள எதிராஜ்சாமி சாலை (எதிராஜ் காலேஜ்), மண்டலம் 8ல் உள்ள நியூ ஆவடி ரோடு (பச்சையப்பா கல்லூரி எதிரே) என 9 இடங்களில் ஒரே நாள் இரவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல இடங்களில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. சாலை சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளது.
laid during the daylight in coordination with @chennaipolice_, with 34 roads scheduled for tonight. (2/2)
— Greater Chennai Corporation (@chennaicorp) October 4, 2023
For more details on the road works, please refer to the following link👇https://t.co/eqmOA2aRBY#ChennaiCorporation #NammaChennaiSingaraChennai
இந்நிலையில் இந்த 9 சாலைகள் அமைக்கப்பட்ட இடம், பொறியாளர் பெயர், சாலை அமைத்த ஒப்பந்ததாரர் பெயர் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்கள் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக அறிய முடியும்.
சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சாலை அமைக்கும் பணியை பல இடங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு இரவிலும் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைப்பது விறுவிறுப்பாக நடக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மாநகராட்சி முதன்முறையாக பொதுமக்களின் சாலை புகார்கள் குறித்து பதில் அளித்தும் வருகிறது.
உங்கள் பகுதி சாலைகள் மோசமாக இருப்பதை புகைப்படத்துடன் எடுத்து சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் டேக் செய்து புகார் அளித்தால், அந்த மண்டல அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்று சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களில் பலருக்கும் சென்னை மாநகராட்சி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் உங்கள் குறைகளை சென்னை மாநகராட்சியின் ட்விட்டரில் தாராளமாக கூறுங்கள். சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டுகிறார்கள்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications