சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்ட முடிவு!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது போல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்ரா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
எம்எஸ் விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். சின்ன வயதிலேயே நடிகராகவும் பாடகராகவும் தான் வர வேண்டும் என விஸ்வநாதன் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர், டி.ஆர். பாப்பா மூலம் எஸ்வி வெங்கட்ராமின் இசை குரூப்பில் சேர்ந்தார்.
அப்போது முதல் இசையில் பயணிப்பது என முடிவு செய்தார். இவர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 1700 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications