Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே! மாநகராட்சி பார்க்கிங் வசூல் வேட்டைக்கு கடிவாளம் போட்ட மாநகராட்சி.. பரபரப்பு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்ணையும் இமெயில் முகவரியையும் மாநகராட்சி கொடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் பார்க்கிங் செய்ய ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது குறிப்பிட்ட இடத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப மக்கள் வருகைக்கேற்பவும் மாநகராட்சியே கட்டணங்களை விதிக்கும்.

Chennai corporation releases press release about parking charge

அதன்படிதான் அந்த தனியார் நிறுவனம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதை மீறி வசூலிக்கக் கூடாது. ஆனால் பல இடங்களில் அரசு அறிவித்த கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடந்தது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால் பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடற்கரைகளில் பெரிய திரையில் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில் பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையிலும் இறுதி போட்டி பெரிய திரையில் ஒளிபரப்பானது.

இதை நண்பர்கள், குடும்பத்தினருடன் காண பலர் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் பெசன்ட் நகருக்கு வந்தவர்களிடம் 4 சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனம் சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அந்த வகையில் அரசு நிர்ணயித்த அளவை விட பார்க்கிங் கட்டணம் அதிகம் வசூலித்ததாக இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலித்தால் 1913 என்ற உதவி எண்ணிலும் @chennaicorp என்ற எக்ஸ் தளத்திலும் புகாரளிக்கலாம்.

4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ 20, இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ 5 வசூலிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் பாண்டி பஜாரில் சிறப்பு கட்டணமாக 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ 60 வசூலிக்கப்படுகிறது என மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+