டிஜிட்டல் மயமாகும் சுடுகாடு.. இனிமேல் சென்னையில் ஆன்லைன் புக்கிங் கட்டாயம்? இதை முதலில் படியுங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்தான் மயான பணிகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சாதாரண சுடுகாடுகள், மின்சார சுடுகாடுகள் உள்ளன. சென்னையில் பெரும்பாலும் மின்சார சுடுகாடுகள் உள்ளன. இங்கே பிணங்களை எரிக்க இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவர் அளித்த சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். குற்றங்களை தவிர்ப்பதற்காக மாநகராட்சி இது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அதே சமயம் இது போன்ற பணிகளை செய்ய மயானங்களில் 30 ஆயிரம் ரூபாய் வரை கூட ஊழியர்கள் பலரும் பணம் கேட்கின்றனர். இந்த பணிகள் மாநகராட்சி சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும் கூட மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக அதிகாரபூர்வமற்ற முறையில் 30 ஆயிரம் ரூபாய் வரை வாங்கப்பட்டு வருகிறது,
இதனால் ஏழைகள் பலர் மின்சார சுடுகாடுகளில் உடலை எரிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக சென்னையில் மயான பணிகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இனி மின்சார சுடுகாடுகளில் உடலை எரிக்க ஆன்லைனில் முன்பதிவுகளை செய்யும் முறையை கொண்டு வர உள்ளனர். அங்கு எரிக்கப்பட உள்ள நபரின் பெயர், அவரின் உறவினர் பெயர், அவர்களின் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு ஸ்லாட்டை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இதன் மூலம் மின்சார சுடுகாட்டு சேவைகளை இலவசமாகப் பெற முடியும். அதோடு முறையற்ற மரணங்கள், லஞ்சங்கள் போன்றவற்றை கண்காணிக்க முடியும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மயம்: தமிழ்நாட்டில் முக்கியமாக சேவைகள் பல டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில்தான் 3 முக்கியமான துறைகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அதேபோல் மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம். மேலும் மெட்ரோவில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. இதை ஒரு நாள் முழுக்க ஒரு முறை பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கு வழங்க முடியும்.
பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் கூட வரும் காலங்களில் இந்த டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications