"சென்னை மாஸ்டர் பிளான் 3".. சிட்டி மட்டுமல்ல சிட்டிக்கு வெளியேவும் மாறப்போகுது.. ரொம்ப முக்கியம்!
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் 15 ஆய்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.
மாஸ்டர் பிளான் என்பது சென்னைக்கான வளர்ச்சி திட்டம் ஆகும். அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும். சென்னையை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த மாஸ்டர் பிளானில்தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த நிலையில்தான், 1,189 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் வரம்பை 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,904 சதுர கி.மீ. ஆகி விரிவுபடுத்துவதற்கான உத்தரவை மாநில அரசு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போதுள்ள 1,189 சதுர கி.மீ.க்கு மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு, திருமழிசை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர் மற்றும் திருவள்ளூர் போன்ற செயற்கைக்கோள் நகரங்கள்/வளர்ச்சி மையங்களுக்கு மாஸ்டர் பிளானுக்கு பதிலாக, ரிஜினல் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன நோக்கம்?: மூன்றாவது மாஸ்டர் பிளான் திட்டத்தில் பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் முதலீட்டு மண்டலங்களை அடையாளம் காண்பதில் CMDA கவனம் செலுத்துகிறது. வணிகத் துறைகளில் மட்டுமல்ல, பல்வேறு தொழில்களிலும் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட்ஸ் (IIHS) அமைப்புடன் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளது.
சென்னை மாற்றம்: சென்னைக்கு புதிய முகம் கொடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன. க்கியமாக சென்னையின் பல்வேறு பீச்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் அல்லது மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல தெருக்களுக்கு ஜாதி ரீதியான பெயர்கள் உள்ளன. வன்னியர் தெரு, ஜிஎன் செட்டி ரோடு என்று பிரபல சாலைகள் பல உள்ளன.
இப்படி ஜாதி ரீதியான பெயர்கள் பல்வேறு தெருக்களின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் வளர்ந்த ஒரு நகரம்.. ஜாதி பெயரை சுமந்து நிற்பது என்பது சரியாக இருக்காது. ஒரு சாலை அனைவருக்கமானதாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் 15 ஆய்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications