வாகன ஓட்டிகளுக்கு "ஆப்பு".. வெயிட் பண்ணி "தூக்கிய" மாநகராட்சி.. யாரந்த ஓனர்கள்.. வெளியானது அறிவிப்பு
சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிரடியை தற்போது துவங்கி உள்ளது.
அதுமட்டுமல்ல, கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் வார்னிங் தந்திருந்தார்.

காரணம் என்ன: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்களால் சென்னையில் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது... சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறைய இடங்களில் நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்கிறார்கள்..
மேலும், பார்க்கிங் வசதி ஏற்படுத்தியும்கூட, பல இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு பலர் வெளியூர்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.. இதனால் அந்த வாகனங்கள் அங்கேயே நிற்க வேண்டியதாகிவிடுகிறது. மேலும் தேவையில்லாத பதட்டமும், குழப்பமும் ஏற்படுதால், மாநகராட்சி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.
பிரியா அறிவிப்பு: இதற்கு பிறகு, மேயர் பிரியா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.. போக்குவரத்து போலீசாரும், சென்னை போலீசாரும் இணைந்து, இந்த வாகனங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.. அதுமட்டுமல்லாமல், வாகனங்களை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
இதுவரை, மாநகராட்சி பகுதிகளில் 1038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்திட அறிவுறுத்தியிருக்கிறோம். அதற்கு பிறகும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை, வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சென்னை மாநகர போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு ஏலம் விட முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்திருந்தார்.
ஏலம் ஆரம்பம்: இப்படி ஒரு அறிவிப்பு வெளியான பின்னரும்கூட,கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் யாரும் மீட்க வரவில்லை..
எனவே, ஏற்கனவே அறிவித்திருந்தபடி, நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்றைய தினம் துவங்கிவிட்டது.. கள ஆய்வில் 1308 வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதெல்லாம் யாருடைய வாகனங்கள்? ஓனர் யார்? என்றெல்லாம் இன்னும் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications