அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு.. எடப்பாடி பழனிசாமி மனு நிராகரிப்பு.. நீதிமன்றம் கொடுத்த ஷாக்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது.

இதன்பின் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓபிஎஸ் அங்கிருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். இதன்பின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இயங்கி வருகிறார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்குப் பதில் அளிக்கச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கைத் தாக்கல் செய்த திண்டுக்கல் சூர்யமூர்த்தி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட அல்ல. அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர். அதனால் சூர்யகூர்த்தியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு சூர்யமூர்த்தி தரப்பில் பதில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அதில், அதிமுக கட்சி விதிகளின்படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே கிடையாது. அதிமுக கட்சி விதியின்படி பொதுச்செயலாளர் தேர்வு அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான் அதிமுக உறுப்பினர்தான் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications