தவெக கொடியில் உள்ள யானை சின்னத்திற்கு தடையா? ஜூலை 3ல் வரப்போகும் முக்கிய தீர்ப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கொடியில் உள்ள யானை சின்னத்திற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தவெக தரப்பில், தவெக கொடியில் உள்ள யானைக்கும், பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தவெகவை தொடங்கிய விஜய், சில மாதங்களுக்கு பின் வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இடம்பெற்றிந்தன.

யானை சின்னம்
இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதன்பின் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார்.
தவெக கொடியில் யானை சின்னம் ஏன்?
அதில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழக வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தம் கிடையாது
பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும், தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களை குழப்பும் வகையில் தவெக கொடி உருவாக்கப்படவில்லை. இதனால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பகுஜன் சமாஜ் வாதம்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில், எங்கள் கட்சி சின்னமான யானையை தவெக கொடியில் பயன்படுத்தி உள்ளதை போல் சூரியன், அண்ணா, கை போன்ற சின்னங்களை திருத்தம் செய்து கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? எங்களின் தேசிய சின்னமான யானையை எந்த கட்சியும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது என்று வாதிடப்பட்டது.
நாளை மறுநாள் தீர்ப்பு
இதற்கு தவெக தரப்பில், தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கொடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பகுஜன் சமாஜ் மனு மீது ஜூலை 3ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications