Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூது கவ்வும்! என் பொண்ணை காணோம் சார்.. வியாசர்பாடியில் கலங்கிய தாய்! விசாரித்த போலீசுக்கு பெரிய ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் உண்மை ஒன்றும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் வியாசர்பாடி பகுதியில் வசித்து வருபவர் அந்த பெண். இவரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

22 வயது நிரம்பிய அவர் திடீரென கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டார். வெளியே சென்ற மகள் வரவில்லை என்று பெண்ணின் தாயார் கதறி இருக்கிறார்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

மகளை காணவில்லை என்று அவரின் தாயார் மகளின் தோழிகளுக்கு போன் செய்து பேசி இருக்கிறார். ஆனால் எல்லோரும் உங்கள் மகள் இங்கே வரவில்லை. அவளை பார்க்கவில்லை என்றுதான் கூறி உள்ளனர். இந்த நிலையில்தான் புதிய நம்பர் ஒன்றில் இருந்து அம்மாவிற்கு போன் வந்துள்ளது. அதில் அந்த பெண்தான் பேசி உள்ளார். அம்மா என்னை கடத்திவிட்டனர். இரண்டு ஆண்கள் என்னை கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.

கட்டிப்போட்டனர்

கட்டிப்போட்டனர்

என்னை இவர்கள் கட்டிப்போட்டு வைத்து உள்ளனர். உடனே 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் அம்மா. எனக்கு பயமாக இருக்கிறது. பணத்தை வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் வந்து கொடுக்கும்படி கூறுகிறார்கள். போலீசுக்கு போனால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அந்த பெண் போனில் அழுதபடியே பேசி இருக்கிறார். அவரின் குரலில் ஒரு நடுக்கமும் இருந்துள்ளது. போனை வைத்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தாயார் பதறி இருக்கிறார். உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தாயார் போலீசுக்கும் போன் செய்துள்ளார்.

போன் செய்தார்

போன் செய்தார்

போலீசிடம் நடந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணின் போன் சிக்னல் எங்கே இருக்கிறது என்று போலீசார் டிராக் செய்துள்ளனர். அதில் அந்த பெண் பூந்தமல்லியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்து அந்த பெண் இருந்த ஏரியாவில் சோதனை செய்து, பெண்ணை கண்டுபிடித்து உள்ளனர். வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் மலையம்பாக்கம் என்ற இடத்தில் அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். அந்த பெண்ணை மீட்ட போது அவருடன் யாரும் இல்லை. இதையடுத்து பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், என்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டனர். சாலையில் நின்று கொண்டு இருந்த என்னை மர்ம நபர்கள் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் போட்டுகொண்டு கடத்தி சென்றனர். நான் கோயம்பேட்டில் நின்று கொண்டு இருந்த போது என்னை கடத்தி சென்றனர். என்னை காட்டு பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டு, காசு கொடுத்தால்தான் விடுவோம் என்று கூறினர், என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

சிசிடிவி

சிசிடிவி

அந்த சிசிடிவி காட்சிகளில் அந்த பெண் தனியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் இன்னொரு பெண், இரண்டு ஆண்களுடன் வந்துள்ளார். இந்த 4 பேரும் ஒன்றாக வந்து அங்கு இருக்கும் காபி ஷாப் ஒன்றில் காபி குடித்துள்ளனர். பின்னர் வெளியே வந்து இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது தனது காதலனின் போனை வாங்கி, தனது தாயாருக்கு போன் செய்து தன்னை கடத்திவிட்டதாக கூறியுள்ளார். அந்த போன் டைமும், வீடியோவில் அந்த பெண் பேசும் டைமும், காதலனின் போன் எண்ணும் சோதனை செய்யப்பட்டு இது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 பொய்

பொய்

அந்த பெண்ணே தன்னை கடத்திவிட்டதாக பொய் சொல்லி இருக்கிறார். 50 ஆயிரம் பணத்திற்காக அவர் பொய் சொல்லி இருக்கிறார். அம்மா போலீசுக்கு செல்ல மாட்டார் என்ற தைரியத்தில் இந்த நாடகத்தை அவர் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் வாக்குமூலத்தை வாங்கிக்கொண்டு, வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+