பிராங்க் வீடியோஸ்! கட்டெறும்பு, ஆரஞ்ச் மிட்டாய் உள்பட 5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் இளம் பெண்களை குறி வைத்து அவர்களுக்கு தெரியாமல் கேமராவை மறைத்து வைத்துக் கொண்டு பேச்சு கொடுப்பது, அதன் மூலம் அவர்கள் சொல்லும் பதில்களை வீடியோவாக்கி அதன் மூலம் யூடியூப் சேனலை வைரலாக்குவது உள்ளிட்டவையால் பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சர்ச்சைக்குரிய கேள்வி

சர்ச்சைக்குரிய கேள்வி

அவர்களிடம் குரூப் செக்ஸ், ஹோமோ செக்ஸ், மது பழக்கம், சிகரெட், ஓரல் செக்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு அதற்கு அவர்கள் கூறும் பதிலை வைரலாக்குவதால் அந்த பெண்கள் சமூகவலைதளங்களில் அசிங்கப்படுகிறார்கள், அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

பெண்களின் கண்ணியம்

பெண்களின் கண்ணியம்

பொது இடங்களில பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன் அடிப்படையில் கோவை 360 என்ற யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர போலீஸார் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவோரை விசாரித்தனர்.

சென்னை காவல் ஆணையர்

சென்னை காவல் ஆணையர்

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது பிராங்க் வீடியோக்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரோஹித்குமார் என்பவர் கொடுத்த புகாரில் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்ச் மிட்டாய், ஜெய்மணிவேல் , நாகை 360 என்ற 5 யூடியூப் சேனல்கள் பெண்கள், முதியவர்கள் அனுமதியில்லாமல் அவர்களை துன்புறுத்தும் வகையில் வீடியோக்களை எடுக்கிறார்கள்.

வீடியோக்கள்

வீடியோக்கள்

அவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள். இது போன்ற யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவற்றை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் கட்டெறும்பு யூடியூப் சேனலில் பிரபலங்களின் நண்பர்களின் தூண்டுதல் பெயரில் பிராங்க் செய்வது என்பது முன் கூட்டியே பேசி வைத்தது என கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+