டிராம் வண்டி டூ மெட்ரோ ரயில்! நெல் வயல் டூ குரோட்டன்ஸ் செடி! மதராசபட்டினத்தின் nostalgic நினைவுகள்!
சென்னை: சென்னை டே- மதராசபட்டினம் என்ற சிறிய கிராமம் இன்று இந்தியாவின் 5ஆவது மிகப் பெரிய நகரமாக உருவெடுத்துள்ள சென்னையில் நடந்த முக்கியமான மாற்றங்கள் என்னென்ன என்பதையும் அந்த கால சென்னையில் இருந்த சில விஷயங்களை நாம் மிஸ் செய்வது எவை எவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
1639ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடம் இருந்து தற்போது தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சிறு கிராமத்தை விலைக்கு வாங்கினார்.

அந்த இடத்திற்கு பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாள் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆகும். அது முதல் சென்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் மெட்ராஸ் என பெயரில் இருந்த நிலையில் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றலானது. அந்த வகையில் இன்று சென்னையின் 387 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இன்று பறக்கும் வானுர்திகள், மெட்ரோ ரயில்கள், மின்சார பஸ்கள் என வெளிநாட்டை போல் வளர்ந்து வரும் சென்னையில் ஆரம்ப காலத்தில் மாட்டு வண்டிகள், ரிக்ஷா வண்டிகள், டிராம் வண்டிகள் இருந்தன.

அது போல் சென்னை ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்து வந்தது. அந்த சென்னையின் முதன்மை தொழில் கடல் சார் வணிகம், நெசவு, விவசாயம் ஆகும். ஆனால் இன்று சென்னையில் ஒரு செடி வளர்க்கவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. அதிலும் குரோட்டன்ஸ் செடியை வளர்த்து வருகிறார்கள். தற்போது ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகங்கள கொண்ட ஆலைகள் என வந்துவிட்டன. இதனால் இந்தியாவின் டெட்ராய்டு என சென்னை அழைக்கலாயிற்று!
இன்று சென்னைக்குள் நுழைந்தாலே கூவம் நதியால் மூக்கை பொத்தி கொள்கிறோமே அன்று கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்டவை கண்ணாடி போல் தூய்மையான நீரை கொண்டிருந்தன. இதில் படகு போக்குவரத்து இருந்தது.
ஆனால் இன்று எங்கு திரும்பினாலும் வானளாவிய கட்டடங்கள், மேம்பாலங்கள், அபார்ட்மென்ட்கள் வந்துவிட்டன. இதனால் நீர் நிலைகள் சுருங்கி, அதில் கழிவுகளை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் ஒரு ஜன்னலை கூட திறந்து வைத்து உட்கார முடியவில்லை. அந்த அளவுக்கு வாகன போக்குவரத்தும் தூசியும் அதிகம். ஆனால் 1950-களில் சென்னை வீதிகளில் சப்தமே இல்லாமல் டிராம் வண்டிகள் சென்னைக்கு அழகை கொடுத்தன.
அன்று எங்கு திரும்பினாலும் பசுமையான மரங்கள், நீரோடைகள் என அழகிய கிராமம் போல் காட்சியளித்து சுத்தமான ஜில்லென்ற காற்றை கொடுத்து வந்தது. ஆனால் இன்று மே மாதம் வந்தாலே போதும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. சென்னையில் ஒவ்வொரு இடமும் தகதகவென தகிக்கும். மரத்தை போட்டு நாமே உலுக்கினால் கூட கூலான காற்று வராமல் வெப்பத்தையே கக்கும்.
கிராமங்களில் ஒவ்வொரு வீடு வீடாக நின்று நலம் விசாரித்துவிட்டு செல்வது போல்தான் அந்த கால சென்னையும் இருந்தது. அதில் திண்ணையும் இருந்தது. ஆனால் இன்று பக்கத்து வீட்டில் கொலையே நடந்தாலும், நமக்கேன் வம்பு என நினைத்து டப்பா கட்டிக் கொண்டு ஆபீஸ் செல்லும் காலமாகிவிட்டது. அத்துடன் மெக்கானிக்கல் வாழ்க்கை போல் அன்று யாருமே வாழவில்லை.

கூழோ கஞ்சியோ நிம்மதியாக குடித்துவிட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து 10 மணிக்கு ஆபிஸுக்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
என்னதான் மல்டிபிளஸ் திரையரங்குகள் வந்தாலும் ஆல்பர்ட், பிளாசா, கேசினோ உள்ளிட்ட தியேட்டர்களில் படம் பார்ப்பது அந்த தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றால் படத்தின் டயலாக்கே கேட்கும் அளவுக்கு இருந்தது.
மதராஸ்பட்டினத்தில் தூய்மையான காற்றை சுவாசித்தார்கள். ஆனால் இந்த கால சென்னையில் பாத்ரூமில் கூட ஏசி போட்டுக் கொண்டுதான் காலத்தை கடத்துகிறோம். அழகான மெட்ராஸ் பாஷை கேட்கவே அழகாக இருக்கும். ஆனால் இன்று மெட்ராஸ் பாஷை பேசினாலே நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒதுக்கி வைக்கும் சூழலே உள்ளது. இது போல் மதராசபட்டினத்தில் நீங்கள் ஏங்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications
