சென்னையை உலுக்கும் டெங்கு ! தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு சிகிச்சை! குறுக்கே வந்த உண்ணி காய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உன்னி காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் வாழ்த்தி உள்ளது குறிப்பாக தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 200 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2000 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதே பாதிப்பு எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை தாமதமாக தொடங்கி இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 200 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Dengue Dengue Fever Health Department

இந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 228 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 79 பேர் என்பதும் கவனிக்கத்தக்கது. சென்னையில் பொறுத்தவரை இந்த மாதத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் இதுவரை 17,27 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுமார் 2000 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் தாங்களாகவே மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்த்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெங்கு பாதிப்பு

மேலும் காய்ச்சலுடன் உடல் வலி, தலைவலி, வாந்தி, அதிக சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் அரசு துறைகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழக அரசு

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக வெளியான தகவலை சுகாதாரத்துறை மறுத்துள்ளது. ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல் காரணமாகவே மாணவன் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உண்ணிக் காய்ச்சல்

தமிழகத்தில், டெங்குவுடன் சேர்த்து உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் 29 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை *4,700-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+