சென்னையிலிருந்து செல்லும்.. எந்தெந்த ரயில்களுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் டிச.26ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக, ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது. எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், ஏசி என அனைத்து ரயில்களின் கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன.

எந்தெந்த ரயில்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

train Indian Railways
  • 215 கி.மீ வரை சாதாரண ரயில்களுக்கு கட்டணம் உயராது
  • 215 கி.மீ கடந்து செல்லும் ஒவ்வொரு கி.மீக்கும் ஒரு பைசா கட்டணம் உயரும்
  • மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் கி.மீ க்கு 2 பைசா கூடுதல் கட்டணம்
  • 500 கி.மீ வரை பயணத்திற்கு ரூ.10 மட்டுமே கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்

மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை
புறநகர் மின்சார ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

சென்னை சென்ட்ரலிலிருந்து 215 கி.மீ எனில், சுமார் ஜோலார்பேட்டை வரை வரும். இங்கு,

  • பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்
  • லால்பாக் எக்ஸ்பிரஸ்
  • கோவை எக்ஸ்பிரஸ்
  • காவேரி எக்ஸ்பிரஸ்
  • ஏற்காடு எக்ஸ்பிரஸ்

ஆகிய ரயில்கள் நின்று செல்கின்றன. சென்ட்ரலிலிருந்து புறப்படும் இந்த ரயில்களில் ரூ.115 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல எழும்பூரிலிருந்து 215 கி.மீ எனில், சிதம்பரம் வரை வரும். இங்கு,

  • சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • உழவன் எக்ஸ்பிரஸ்
  • ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
  • மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
  • சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ்

உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலில் ரூ.125 முதல் ரூ.185 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில்களிலும் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களுக்கு 215 கி.மீ எனில் விருத்தாச்சலம் சந்திப்பு வருகிறது. இங்கு,

  • வைகை எக்ஸ்பிரஸ்
  • பல்லவன் எக்ஸ்பிரஸ்
  • நெல்லை எக்ஸ்பிரஸ்
  • பொதிகை எக்ஸ்பிரஸ்
  • பாண்டியன் எக்ஸ்பிரஸ்
  • கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

ஆகிய ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலில் ரூ.115 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில்களிலும் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+