Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூந்தமல்லியில் "சுருண்ட" பெண்கள்.. மிஸ்டர் அந்தோணி இருக்காரே, கோடியை பறித்த "கவர்ச்சி".. பரபர சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டுதான் இருக்கும்.. இதோ ஏமாந்து போன பெண்கள் ஆவேசமாகி, போராட்டம் செய்து, நடுரோட்டிலேயே மயங்கி விழுந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை தந்துள்ளது.

தொழில்நுட்பம் பெருக பெருக, அதை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளும் அதிகரித்தபடியே வருகின்றன.. நாளுக்கு நாள் நடக்கும் புதுபுது விநோத மோசடிகள் குறித்து போலீசாரும் எச்சரிக்கை விடுத்தபடியே இருக்கின்றனர்.. அதிலும் கிரைம் போலீஸார், இதுகுறித்து பலமுறை அலர்ட் விடுத்தபடி உள்ளனர். ஆனாலும், மோசடிகள் நீள்கின்றன.

Chennai Diwali Gift Chit fund and women fainting during road blockade near poonamallee

விளம்பரம் : 4 நாட்களுக்கு முன்புகூட, கோவையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி, ஆயிரக்கணக்கானோரிடம் டெபாசிட் பெற்று மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. சில ஆயிரம் டெபாசிட் செய்தால், ரூ.200 அக்கவுண்டில் வரும், 1 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் அதற்கேற்ற பணம் அக்கவுண்ட்டில் விழுந்து கொண்டேயிருக்கும் என்று சொல்லி, மக்களிடம் டெபாசிட் பணத்தை வாங்கியிருக்கிறார்கள்.

கடைசியில், இந்த மோசடியில் லட்சக்கணக்கானோர் பணத்தை இழந்து, கோவை எல்.என்.ஜி பைபாஸ் பகுதியில், My V3 Ads என்ற அந்த நிறுவனத்துக்கு முன்பு திரண்டதால், அந்த பைபாஸ் ரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: அதைபோலவே, சென்னையில் தீபாவளி சீட்டு கட்டியவர்களும் ஏமாந்து போயிருக்கிறார்கள்.. செய்யாறு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ்.. இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் இந்த சீட்டு கம்பெனியை நடத்தி வருகிறார். பல வருடங்களாகவே தீபாவளி சீட்டு, மளிகை சீட்டு, மாத தவணை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்..

சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு, சொன்னபடியே பொருட்களையும், பணத்தையும் தந்து வந்துள்ளார். இந்த நம்பிக்கையால்தான், இந்த வருட தீபாவளிக்கும் சீட்டுக்களை கட்ட பெரும்பாலானோர் முன்வந்தனர்.

அந்தோணி ராஜ்: ஆனால், தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு, பொருட்களையும் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டார் அந்தோணி ராஜ்.. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள், அந்த சீட்டு கம்பெனியின் கிளை அலுவலகத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.. ஆனால், அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது..

இதனால் பணத்தை கட்டி ஏமாந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுப்பாக்கம் அருகே சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...

திடீர் போராட்டம்: தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டுவர்களை அப்புறப்படுத்தி, சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், ஆவேசமான பெண்கள், தொடர்ந்து கூச்சலிட்டனர்.. இதில் பெண்கள் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டனர்.. இதனால் உடன் வந்தவர்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்..

ஒருபக்கம் டிராபிக் ஜாம், இன்னொரு பக்கம் பெண்கள் மயங்கி விழுவது என அந்த இடமே பரபரப்பாகிவிட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள் என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரம் இன்னமும் அடங்கவில்லை.

கண்ணீர் கதறல்: அவர்கள் சொல்லும்போது, அந்தோணி தாஸ் கைதாகிவிட்டாலும், அவரது மனைவியாவது, தங்களது பணத்தை திரும்ப தருவதற்கு உறுதிதர வேண்டும்.. எங்களை நம்பி இந்த சீட்டில் சேர்ந்தவர்கள், எங்கள் வீடுகளுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். இதை பற்றி போலீசில் சொல்லியும் நடவடிக்கையில்லை" என்று கண்ணீருடன் சொல்கிறார்கள்.

அந்தோணிராஜ் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் என்பதால், இதன் தலைமையகம் செய்யாறில் இயங்கி வந்துள்ளது.. இதற்கு நிறைய பிரான்ஞ்சுகளும் உண்டு.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன..

கவர்ச்சி விளம்பரம்: தீபாவளி சீட்டு, மாத சீட்டு, நகை சீட்டு இப்படி நிறைய நடத்தி வந்திருக்கிறார் அந்தோணி ராஜ்.. 15 பேரை இந்த சீட்டில் சேர்த்து விட்டால், ஒரு கார்டு இலவசமாக கிடைக்குமாம். இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்துதான், ஏராளமானோர் விழுந்துள்ளனர்.. தங்களுக்கு தெரிந்த பல பெண்களையும் இந்த திட்டத்தில் சேர்த்து விட்டுள்ளனர்.. இந்த காட்டுப்பாக்கம் கிளையில் மட்டுமே, பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறாராம், மிஸ்டர் அந்தோணி ராஜ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+