சென்னையே அசந்துடுச்சு.. எழும்பூர் மருத்துவமனைக்கு கமலின் "ஜில்" பரிசு பாருங்க.. சபாஷ் ஐஐடி தமிழர்கள்
சென்னை: தன்னுடைய பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் இயந்திரத்தை வழங்கியிருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.
பிரபல நடிகர், சினிமா தயாரிப்பாளர், டைரக்டர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி என பன்முக திறமைகொண்டவர் கமல்ஹாசன். இன்று அவருக்கு பிறந்தநாள்.

ரசிகர்கள்: இதையடுத்து, பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், என அனைவருமே வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்... அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு" என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி: இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனை சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை' என்று பதிவிட்டுள்ளார்.
வாயு ஜல்: இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கருவியின் பெயர் வாயு ஜல் என்பதாகும்.. காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் இதுவாகும்.. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இந்த குடிநீர் இயந்திரத்தை வழங்கியதுடன், இந்தக் கருவியை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல்: பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இங்கே வாயு ஜல் என்ற இயந்திரத்தை வழங்கியிருக்கிறோம். கடந்த 2 வருடங்களாக, ராஜ்கமல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் நீரை நான் பருகி வருகிறேன். ஆரோக்கியமாகவும் இருந்து வருகிறேன்.
அது, இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பயன்பட வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது இதை பயன்படுத்தலாம். இவ்வாறு நான் செய்வதன் மூலம், இதைவிட அரசு பன்மடங்கு பெரிதாக செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முன்மாதிரி முயற்சியான இதைப் பார்த்து, இந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் பயன்களை புரிந்துகொண்டால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதை நிறுவுவதற்கு என்னைப் போன்றவர்கள் அரசுக்கு உதவியாக கரம் கோர்ப்பார்கள்.
தமிழர்கள்: இந்த கருவியை உருவாக்கியவர்கள், இந்தியர்கள் அதுவும் தமிழர்கள். ஐஐடியில் உருவாக்கப்பட்ட கருவியும்கூட.. இதன்மூலம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாசில்லாத குடிநீரை நாம் அனைவரும் பருக முடியும். இந்த கருவியை ஒரு முன்மாதிரியாக அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.
மநீம சார்பில் ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடத்தில் இதுபோன்ற கருவியைப் பொருத்தியிருக்கிறோம். எங்களுடைய அலுவலகத்தில் இருக்கிறது. இன்னும் செய்யலாம். எனவே, இப்படி ஒரு கருவியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதுபோல் தொடர்ந்து செய்வதற்கு, என்ன உதவிகள் கேட்டாலும் நாங்கள் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications