இன்று முதல் 10 நாட்களுக்கு உழவன், சேது எக்ஸ்பிரஸ் உள்பட 5 ரயில்களை பிடிக்க எழும்பூர் போகாதீங்க!
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் இந்த மாதம் இன்று முதல் 10 நாட்களுக்கு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழும்பூர் ரயில் நிலையப் பணிகள்: 10 நாட்களுக்கு 9 ரயில்களின் சேவை தாம்பரம் / கடற்கரையுடன் நிறுத்தம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணமாக, அங்கிருந்து புறப்படும் / நிறுத்தப்படும் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை, வரும் டிசம்பர் மாதம் 10 நாட்களுக்கு தாம்பரம் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களுடன் நிறுத்தப்படும்/தொடங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் டிசம்பர் 05/06, 2025 முதல் டிசம்பர் 14/15, 2025 வரை அமலில் இருக்கும்.
1. ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் விவரம் (வரும் ரயில்கள்):
பின்வரும் 4 ரயில்கள் டிசம்பர் 05 முதல் டிசம்பர் 14, 2025 வரை தாம்பரம் நிலையத்துடன் நிறுத்தப்படும் (எழும்பூர் வரை செல்லாது):
*16866 உழவன் எக்ஸ்பிரஸ் (தஞ்சாவூர்): தாம்பரம் வந்தடையும் நேரம் - அதிகாலை 03:45 மணி.
*20636 அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (கொல்லம்): தாம்பரம் வந்தடையும் நேரம் - அதிகாலை 05:20 மணி.
*22662 சேது எக்ஸ்பிரஸ் (ராமேஸ்வரம்): தாம்பரம் வந்தடையும் நேரம் - காலை 06:35 மணி.
*16752 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (ராமேஸ்வரம்): தாம்பரம் வந்தடையும் நேரம் - காலை 06:45 மணி.
2. ரயில்கள் தாம்பரம் / கடற்கரையில் இருந்து புறப்படும் விவரம் (புறப்படும் ரயில்கள்):
பின்வரும் 5 ரயில்கள் டிசம்பர் 06 முதல் டிசம்பர் 15, 2025 வரை எழும்பூருக்குப் பதிலாக மாற்றியமைக்கப்பட்ட நிலையங்களிலிருந்து புறப்படும்:
தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில்கள்
*16865 உழவன் எக்ஸ்பிரஸ் (தஞ்சாவூர்): தாம்பரம் புறப்படும் நேரம் - இரவு 11:00 மணி.
*20635 அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (கொல்லம்): தாம்பரம் புறப்படும் நேரம் - இரவு 08:20 மணி.
*22661 சேது எக்ஸ்பிரஸ் (ராமேஸ்வரம்): தாம்பரம் புறப்படும் நேரம் - மாலை 06:20 மணி.
*16751 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (ராமேஸ்வரம்): தாம்பரம் புறப்படும் நேரம் - இரவு 07:42 மணி.
சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்:
*22158 மும்பை CSMT எக்ஸ்பிரஸ்: சென்னை கடற்கரை புறப்படும் நேரம் - காலை 06:45 மணி.
பயணிகள் டிசம்பர் 05 முதல் 15 ஆம் தேதிக்குள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது, எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரம் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களில் இருந்து ரயிலைப் பிடிக்க வேண்டியதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications