பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையின் முக்கியப் போக்குவரத்து சேவையான சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இருக்கின்றன. தண்டவாளப் பணிகள், சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11, 12) சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே திருவள்ளூர் பணிமனையில் 11-ஆம் தேதியான இன்று சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை 7 மணி நேரம் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக, சனிக்கிழமை (ஏப்ரல் 11) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர் செல்ல வேண்டிய ரயில் அதற்குப் பதிலாக திருநின்றவூர் வரை இயக்கப்படும்.
பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்:
சென்னையில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அதிகாலை 4.30 மணி, காலை 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருவள்ளூர் செல்ல வேண்டிய ரயில்கள், திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவள்ளூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணி, 5.55 மணிகளில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரை செல்ல வேண்டிய ரயில் திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு பொன்னேரி செல்ல வேண்டிய இமு ரயில், திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications