44 ஆயிரம் பேர்.. சென்னை வாக்கு சதவீதம் அதிகரிப்பு.. ஆனால் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 83.17% வாக்குகள் பதிவானாலும் கூட, எண்ணிக்கை அடிப்படையில் 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தலை விடவும் குறைந்த அளவிலான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலை ஒப்பிட்டால், சுமார் 44 ஆயிரம் பேர் குறைவாகவே வாக்களித்துள்ளனர். இதனால் எஸ்ஐஆர் பணிகளால், வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டுமே குறைந்திருப்பதாக விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் சுமூகமாக நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவில், மொத்தமாக 85.15% பேர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 5 கோடி வரை வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4.83 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Election commission tamilnadu assembly election 2026 chennai votes SIR

கடந்த தேர்தலை விடவும் சுமார் 20 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருக்கிறது. வழக்கமாக சென்னையின் வாக்கு சதவீதம் சாமானிய மக்களிடையே விமர்சனத்தை பெறும். இருப்பதிலேயே குறைவான வாக்கு சதவீதம் சென்னையில் தான் இருக்கும். இதனால் தலைநகரில் தேர்தல் நாளினை இன்னொரு விடுமுறை நாளாகவே மக்கள் கருதுவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படும்.

ஆனால் இந்த முறை சென்னை மாவட்டத்தில் மட்டும் 83.7% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதற்கு எஸ்ஐஆர் நடவடிக்கையே காரணம் என்று சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் சதவிகிதத்தை விட்டுவிட்டு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், சென்னையில் கடந்த தேர்தலை விடவும் குறைவான அளவிலேயே வாக்குப்பதிவு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

2016 சட்டசபைத் தேர்தலில் மொத்தம் இருந்த 39.75 லட்சம் வாக்காளர்களில், 24.33 லட்சம் பேர் வாக்களித்தனர். இதனால் வாக்கு சதவிகிதம் 61.2ஆக இருந்தது. அதேபோல் 2021 சட்டசபைத் தேர்தலில் சென்னையின் வாக்காளர்கள் எண்ணிக்கை 40.04 லட்சமாக உயர்ந்தது. அப்போது 24.16 லட்சம் பேர் வாக்களித்தனர். அப்போதைய வாக்கு சதவிகிதம் 60 ஆக இருந்தது.

இந்த சட்டசபைத் தேர்தலில் சென்னையின் வாக்காளர் எண்ணிக்கை 28.30 லட்சமாக குறைந்தது. அதில் 23.69 லட்சம் பேர் வால்க்களித்துள்ளனர். இதன் வாக்கு சதவீதம் 83.7ஆக இருந்தாலும், வாக்களித்தோரின் எண்ணிக்கையில் சுமார் 44 ஆயிரம் பேர் வரை குறைந்துள்ளனர். இதனால் சென்னையில் வழக்கத்தை விடவும் குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+