"தம்பி சூடா ஒரு டீ சொல்லு".. திடீரென சாலையோர டீ கடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.. வைரல் வீடியோ உள்ளே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆய்வு பணிகளுக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் டீ கடை ஒன்றில் டீ குடித்த சம்பவம் வைரலாகி உள்ளது.

Recommended Video

    தம்பி சூடா ஒரு டீ சொல்லு.. திடீரென சாலையோர டீ கடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.. வைரல் வீடியோ உள்ளே!

    வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையை கடந்தது. சென்னைக்கு அருகே காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    இந்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    ஸ்டாலின் ஆய்வு

    ஸ்டாலின் ஆய்வு

    இந்த நிலையில் மழையால் பாதித்த பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக களத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடசென்னையில் தொடங்கிய ஆய்வை சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொண்டார். நேரடியாக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

     மருந்து

    மருந்து

    தினமும் 15-21 இடங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு மருந்துகள், உணவு பொட்டலம், போர்வைகள் என்று நிவாரண பொருட்களை வழங்கினார். அதோடு மழை நீர் வேகமாக வெளியேற வழி செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்தார். சென்னையை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நிவாரணம்

    நிவாரணம்

    செங்கல்பட்டில் பல இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை. இதையடுத்து இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் காஞ்சிபுரம் செல்லும் வழியில் மாம்பாக்கத்தில் திடீரென முதல்வரின் கான்வாய் நிறுத்தப்பட்டது. அங்கு இருந்த தேநீர் கடையில் சூடாக முதல்வர் மு க ஸ்டாலின் டீ சாப்பிட்டார்.

    டீ குடித்தார்

    டீ குடித்தார்

    கடைக்கு உள்ளே எளிமையாக சென்ற முதல்வர் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து டீ குடித்தார். அதோடு கடையில் பணியாற்றியவர்கள், அங்கு டீ குடிக்க வந்தவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அமைச்சர்கள் சிலரும், எம்பி டிஆர் பாலுவும் முதல்வருடன் இருந்தனர். முதல்வர் எளிமையாக இப்படி டீ கடையில் அமர்ந்து டீ குடித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+