சென்னை வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட பிரிட்ஜ், டிவி உபகரணங்கள்.. காப்பீடு பெறுவது ரொம்ப ஈஸி
சென்னை: மிக்ஜாம் புயல் ஒட்டுமொத்த சென்னையையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில், பிரிட்ஜ், டிவி போன்ற பொருட்களுக்குக் காப்பீடு கிடைக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் சென்னைக்குக் கனமழையை மட்டுமின்றி மிக மோசமான பாதிப்பையும் சேர்த்தே கொடுத்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி சென்னையில் பல்வேறு இடங்களிலும் இந்த கனமழையால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் சென்னையில் பல இடங்களிலும் உள்ள வீடுகளில் நீர் புகுந்தது. இதனால் பல வீடுகளில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. இதற்கிடையே இதுபோன்ற பாதிப்புகளுக்குக் காப்பீடு கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அதற்கான விடையை நாம் பார்க்கலாம்.
காப்பீடு: இவை எல்லாம் காப்பீடுகளில் கவர் ஆகும் என்றாலும் நாம் அதற்கான வீட்டு இன்சூசரன்ஸை முதலில் எடுக்க முடியும். இது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் சூறாவளிகள், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அவ்வப்போது நடந்து வந்தன. ஆனால், இப்போபது அவை அடிக்கடி நிகழத் தொடங்கியுள்ளன.
இதனால் நாம் இருக்கும் வீடுகளைக் காப்பீடு செய்வது என்பது ஆப்ஷனல் என்பதில் இருந்து அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிடுகிறது. இந்தியாவில் பொதுவாக வீட்டுக் காப்பீடு என்பது பொதுவாகக் கட்டிடம் மற்றும் உள்ளே இருக்கும் பொருட்கள் என இரண்டையும் உள்ளடக்கியே இருக்கிறது. இந்த காப்பீடு வீட்டு உரிமையாளர்களுக்குக் கிடைக்கும். மேலும் வாடகை வீடுகளுக்கும் எடுக்க முடியும்.
பாதுகாக்கும்: ஒரு சிறந்த வீட்டுக் காப்பீடு என்பது இயற்கைப் பேரழிவுகள் அல்லது எதிர்பாராத பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் சரியான ஹோம் இன்சூரன்ஸை எடுத்தால் அதில் வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்கள், டிவி, பிரிட்ஜ், இதர வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே கவரேஜ்ஜில் வரும்.
தீ விபத்துகள், திடீர் சேதங்கள் என அனைத்தையும் இது உள்ளடக்கி இருக்கும். வீட்டில் இருக்கும் அனைத்து மதிப்புமிக்க பொருட்களுக்கும் தனிப்பட்ட உடைமைகளுக்கு இது பாதுகாப்பை வழங்குகிறது. அதிலும் இப்போது சில காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களுக்கு ஏற்கனவே இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் தொகையைக் கூட தர ரெடியாகி இருக்கிறது.
எதற்கெல்லாம் காப்பீடு கிடைக்கும்: சில காப்பீட்டு பாலிசிகளில் மொபைல், கணினிகள், கூட கவரேஜ்ஜில் வரும். அதேநேரம் வெள்ளம் போன்ற பேரழிவு ஏற்படும் போது முழு வீட்டையும் சரி செய்ய ஆகும் செலவு என்பது காப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகம் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பாலிசி எடுக்கும் போதே கவரேஜ் எந்தளவுக்குத் தேவை என்பதை முடிவு செய்து அதற்கேற்ப பாலிசி எடுக்க வேண்டும். பொதுவாக வீட்டின் வகை, இருப்பிடம் மற்றும் உடைமைகளின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரீமியம் தொகை என்பது வீட்டின் வயது, கட்டமைப்பு வகை, கட்டுமான செலவுகள் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்வார்கள். அதேநேரம் தப்பித் தவறியும் குறைவான பிரீமியம் தொகையில் கிடைக்கிறது என்று ஏதோ ஒரு இன்சூரன்ஸை எடுத்துவிடாதீர்கள். பிறகு இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்படும் போது சொற்ப தொகையே கிடைக்கும். எனவே, பொறுமையாக அனைத்து விதிமுறைகளையும் படித்து உங்களுக்கு எந்த காப்பீடு சரியாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்" என்றார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications