சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடக்கம்..சிலிர்த்த பார்வையாளர்கள்! இன்றைக்கு தான் முக்கியமான நாளாம்
சென்னை: சென்னை: சென்னையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியிருக்கிறது. பலரும் ஆர்வத்துடன் அந்த பந்தயத்தை கண்டு வரும் நிலையில் இன்று இரவு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கிறது. இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே நாளை மெயின் ரேஸில் வீரர்கள் வரிசைப்படி நிறுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 4 சென்னை இன்று மற்றும் நாளை சென்னையில் அண்ணா சாலையில் நடைபெறுகிறது. இன்று போட்டி 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பயிற்சி போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த கார் பந்தயத்துக்காக தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்தொடல் வரை கார் ரேஸ் ட்ராக் அமைக்கப்பட்டு, தடுப்புகள், டயர்கள், வழிகாட்டும் அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள், தொழில் நிறுவனங்களின் ஸ்பான்சர் உள்ளிட்டவை மூலம் செய்யப்பட்டு, மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து கார்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் தான் இந்த பந்தயமானது நடக்க இருக்கும் நிலையில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்ற கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய, சாலையோரங்களில் போட்டிகளை காண வந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கையசைத்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.
இந்தியான் ரேசிங் லீக் எனும், சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் வீதம் 16 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் ஒவ்வொரு அணிக்கும் 2 கார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று இரவு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கும் நிலையில், இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே நாளை மெயின் ரேஸில் வீரர்கள் வரிசைப் படி நிறுத்தப்படுவர். இதனால் இந்த போட்டிகளும் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இந்தியன் ரேஸிங் லீக் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6:00 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 10:00 மணிக்கும் நடைபெறுகிறது. இரு பந்தயங்களும் தலா 30 நிமிடங்கள் நடைபெறும். இது மட்டுமில்லாமல் ஜேகே டயர் ஜூனியர் ரேஸும் நடைபெறுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த போட்டிகளுக்கு இடையே சாகச நிகழ்சிகளும் நடைபெறுகிறது.
தற்போது ஆறு அணிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தலா 18 வீரர்களும், ஆறு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்கின்றனர். 16 கார்கள் இந்த ரேசில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சந்திப் குமார், முகமது ரியான் ஆகிய சென்னை டர்போ அணி வீரர்களும். இங்கிலாந்தில் இருந்து ஜான் லான் கேஸ்டர் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, மலேசியா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications