Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாடுகளில் நடக்கும் F1 ரேஸுக்கும் சென்னை பார்முலா 4 ரேஸுக்கும் என்ன வித்தியாசம்.. மலைக்க வைக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் பார்முலா 4 கார் ரேஸ் நடக்கும் நிலையில், இதற்குச் சென்னைவாசிகள் ரெடியாகி வருகிறார்கள். நம்ம சென்னையில் இப்போது பார்முலா 4 ரேஸ் நடக்கும் நிலையில், பார்முலா 3, பார்முலா 2 மற்றும் பார்முலா 1 இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகெங்கும் கார் ரேஸுக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறார்கள். பல முக்கிய நாடுகளிலும் கார் ரேஸ்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது நம்ம சிங்கார சென்னையில் பார்முலா 4 கார் போட்டிகள் நடக்கிறது.

formula 4 race formula 4 race chennai

பார்முலா ரேஸ்கள் பொதுவாகப் பிரத்தியேக டிராக்குகளிலும் நடக்கும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். இப்போது சென்னையில் நடக்கும் ரேஸ் ஸ்ட்ரீட் சர்க்யூட்களில் தான் நடக்கிறது. இந்த ரேஸ் தீவுத்திடலைச் சுற்றி நடக்கும் நிலையில், கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என வழியாக மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்முலா 4 கார் பந்தயம் என்பது வெறும் தொடக்கம் தான். இதைத் தாண்டி விறுவிறுப்பான இன்னும் சில கார் ரேஸ்கள் உள்ளன. அவை என்ன கார் ரேஸ்கள்.. இந்த ரேஸ்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

பார்முலா 1: கார் ரேஸில் உச்சமாகக் கருதப்படுவது தான் ஃபார்முலா 1.. சர்வதேச அளவில் தலைசிறந்த டிரைவர்கள், நிறுவனங்கள் இருக்கும் ஒரு ரேஸ். இதில் உலகெங்கும் இருந்து 20 தலைசிறந்த ஓட்டுநர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றால் இதில் எந்தளவுக்குப் போட்டி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உலகெங்கும் நடக்கும் பார்முலா 1 ரேஸுக்கு ரசிகர்களும் பல கோடி பேர் இருக்கிறார்கள்.

உலகின் அதிவேக ரேஸ் கார்களாக அறியப்படும் ஃபார்முலா 1 கார்கள் பொதுவாக ஹைப்ரிட் பவர் முறையில் உருவாக்கப்படும். அதிநவீன ஏரோடைனமிக் அமைப்பு, உயர்தர பாதுகாப்பு என அனைத்தும் இதில் இருக்கும். பார்முலா 1 கார்களால் 374கிமீ வேகத்தில் கூட அசால்டாக பயணிக்க முடியும்.

பார்முலா 2: ஆனால், அனைவராலும் இந்த பார்முலா 1 போட்டிகளில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாது. அதற்கு அவர்கள் பல நிலைகள் தாண்டி வர வேண்டி இருக்கும் அதில் முக்கியமானது பார்முலா 2.. பொதுவாக பார்முலா 1 போட்டிகள் நடக்கும் அதே டிராக்குகளில் இந்த பார்முலா 2 ரேஸும் நடக்கும். பார்முலா 1 ரேஸில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கான காரை சொந்தமாக வடிவமைக்கும். ஆனால், பார்முலா 2இல் அப்படி இல்லை. அனைவரும் ஒரே மாதிரியான காரை தான் இயக்குவார்கள். எனவே, டிரைவரின் திறனை இது தனித்துக் காட்டும்.

அதாவது அனைத்து கார்களும் ஒரே மாதிரி இருப்பதால் யார் டாப் இடத்திற்கு வருகிறார்களோ அவர்கள் வேற லெவல் திறமைசாலிகள் என அர்த்தம். இதில் சிறந்த விளங்குவோருக்கு பார்முலா 1 அணிகளில் எளிதாக வாய்ப்பு கிடைக்கும். பார்முலா 2 கார்களில் சரிபாதி ஹார்ஸ் பவரை கொண்டதாக இது இருக்கும். இதன் அதிகபட்ச வேகம் 335 கிமீ ஆக இருக்கும்.

பார்முலா 3: அடுத்த நிலையில் இருப்பது பார்முலா 3... இவை பார்முலா 1 அல்லது பார்முலா 2 கார்களை போலச் சக்திவாய்ந்த கார்களாக இருக்காது. பொதுவாக பார்முலா ரேஸ்களில் ஆர்வமாக இருப்போர் முதலில் முயல்வது இந்த பார்முலா 3 கார்கள் தான். என்டரி லெவல் என்பதால் சாதாரணமாக இருக்கும் என்று தப்பித் தவறிக் கூட நினைத்துவிடாதீர்கள். இந்த பார்முலா 3 கார்களே மணிக்கு 270 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதிலும் அனைத்து டீம்களுக்கும் ஒரே போன்ற கார்களே இருக்கும் என்பதால் டிரைவர்களின் திறனே இதில் முக்கியத்துவம் பெறும். கார் ரேஸின் நுட்பங்களை அதில் தான் கற்றுக் கொள்வார்கள்.

பார்முலா 4: அடுத்து கடைசியாக வருவது தான் பார்முலா 4 கார் பந்தம்.. பெரும்பாலான நாடுகளில் முதலில் சிறுவர்கள் கோ கார்டிங் தான் ஓட்டி கற்றுக் கொள்வார்கள். கோ கார்டிங்கிற்கும் பார்முலா கார் பந்தயங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியே குறைப்பது தான் இந்த பார்முலா 4 கார் ரேஸ்.

மற்ற பார்முலா ரேஸ்களில் உலக சாம்பியன்ஷிப் நடத்தப்படும் நிலையில், பார்முலா 4 ரேஸில் அது தேசிய அல்லது பிராந்திய அளவிலான சம்பியன்ஷிப் தொடராகவே இருக்கும் மற்ற பார்முலா கார்களை விட இதில் ஆகும் செலவு குறைவு என்பதால் பலரும் இதில் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள். இந்த பார்முலா 4 கார்கள் அதிகபட்சம் 240 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும்.

பார்முலா இ: இது தவிர பார்முலா இ என்றும் தனியாக ஒரு ரேஸ் இருக்கிறது. இது முழுக்க முழுக்க மின்சார ரேஸ் கார்களுக்கு இடையே நடக்கும் பந்தயம். மாற்று எரிபொருளை மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த பார்முலா இ போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த மின்சார வாகனங்கள் அதிகபட்சம் 220 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முன்னெடுக்கும் வகையில் இது உலகெங்கும் உள்ள முக்கிய நகரங்களில் நடக்கும். கடந்தாண்டு கூட ஹைதராபாத்தில் இந்த பார்முலா இ ரேஸ் நடந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+