என்னங்க நடக்குது சென்னையில்.. இரவோடு இரவாக அதிகாரிகள் செய்த "மூவ்".. இப்பவே திக்திக்ன்னு இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வர உள்ள மழை காலத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இங்கே கடைசி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. மண்டலம் 3 &14 இல் படகுகள் முதல் கட்டமாக கொடுக்கப்பட்டன. மண்டலம் 3க்கு ஒரு படகும், மண்டலம் 14க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டன.

கால்வாய்களை தூர்வாருவது, வெள்ள நீர் வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்வது, புதிய அமைப்புகளை கட்டுவது என்று தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன. சென்னையில் நடக்கும் இந்த ஏற்பாடுகளை பார்க்கும் போது.. இந்த வருடமும் சென்னையில் வெள்ளம் எதுவும் ஏற்படுமோ என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டு உள்ளது.

weather tamilnadu weatherman

அறிவுறுத்தல்: வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம், இரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத்துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நம்முடைய அரசு அலுவலர்கள் உரிய விளக்கத்தினையும், திட்டங்களின் தற்போதைய நிலையினையும் தெரிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும்.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்திட வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள மனித நுழைவு பகுதி மற்றும் இரண்டு மனித நுழைவு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் எந்த தவறுகளும் நிகழாவண்ணம் பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள். அதனால் மழைக்காலத்தில் மின் வாரியப் பணி என்பது மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மழைக்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசுவது மிகவும் சிறப்பாக அமையும், என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+