சென்னையில் அதிகாலையில் பயங்கரம்.. காதலி, காதலியின் தாயை உயிருடன் எரித்த காதலன்.. 3 பேரும் பலி
சென்னை: சென்னையில் அரசு வேலை கிடைத்த பின்னர் காதலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென வேறு ஒருவருடன் கல்யாணம் செய்ய நிச்சயம் செய்து விட்டார்கள் அவரது பெற்றோர். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன்.. வீடு புகுந்து தீ வைத்ததில் காதலி, காதலியின் தாயார் உடல் கருகி பலியாகினர். அந்த தீயில் காதலனும் சிக்கி பலியாகிவிட்டார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருந்தார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். இதனால் வெங்கட்டம்மா மற்றும் ரஜித்தா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரஜித்தா வசிக்கும் அதே அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்( வயது 31). இவர் ரஜிதாவை 7 வருடமாக காதலித்து வந்துள்ளார்.ரஜித்தாவும் காதலித்து வந்ததாக அப்பகுதியினர் சொல்கிறார்கள்.

உதாசினப்படுத்தினார்
இதற்கிடையே தந்தை இறந்து போனதால், ரஜிதாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்திருக்கிறது. தந்தை வேலை பார்த்த சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக ரஜிதா வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளார். அரசு வேலை கிடைத்த பின்னர் தனது காதலர் சதீஷை உதாசினப்படுத்தினாராம். அவரது போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் சதீஷ் கோபத்தில் இருந்துள்ளாராம்.

முடியாது
இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி ரஜிதாவுக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த விஷயம் தெரிந்ததும் சதீஷ் கடும் வேதனை அடைந்தாராம். ஏன் இப்படி செய்கிறாய் என்று ரஜிதாவுடன் சதீஷ் சண்டை போட்டாராம். மயிலாப்பூரைச் சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என ரஜிதா கூறியதாக தெரிகிறது.

உயிருடன் எரித்தார்
இதனால், காதலி மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் காதலியை கொன்று தானும் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார். இதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜீதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். பின்னர், காதலி ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வைக்க வீடு மொத்தமும் தீ பற்றி எரிந்தது.

தீயணைப்பு துறை
இந்த சம்பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலியாகி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீ விபத்து என்று கருதி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆர்.கே. நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

என்ன நடந்தது
வீட்டில் தாய் , மகள் மட்டுமே வசித்த நிலையில் மூன்றவதாக உடல் கருகி கிடந்தவர் யார் என்று விசாரித்த போதுதான், ரஜிதாவின் காதலன் சதீஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆர்கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மற்றும் காதலியின் தாயாரை எரித்துக் கொன்று காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications