சென்னை அரசு மருத்துவமனையில்.. ஒரே நிமிட பொய்யில்... 5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கலியை இழந்த காஞ்சனா
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் கழுத்துவலிக்கு சென்ற பெண்ணிடம் டாக்டராக நடித்து தங்க சங்கிலி திருடியிருக்கிறார் டிப் டாப் ஆசாமி ஒருவர்.. 'எக்ஸ்ரே' எடுக்க டாக்டர் போல் பேசி நைசாக அழைத்து சென்ற நபர், நகைகளுடன் எக்ஸ்ரே எடுக்க முடியாது என்றும், நகைகளை தன்னிடம் கொடுக்கும்படியும் கூறினாராம். டாக்டரிடம் கொடுத்தால் நகை பாதுகாப்பாக இருக்கும் எனறு நம்பி நகையை அந்த பெண் கழட்டி கொடுத்துள்ளார். அப்போது நகையுடன் அந்த நபர் எஸ்கேப் ஆனார்.
மக்களை எப்படியாவது ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் என்று தினமும் பல்வேறு வகையில் பலரும் செயல்படுகிறார்கள். நம்முடைய சின்ன கவனக்குறையும் திருடுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் வசதியாக போய்விடும். பலரும் ஆசையில் விழுகிறார்கள். நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள். அதேபோல் சிலர் நம்பும்படியான பொய்களிலும் விழுந்து ஏமாறுகிறார்கள். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் போது நகைகள் அணிந்திருக்கக்கூடாது என்பது விதி. அதை பயன்படுத்தி ஒருவர் டாக்டர் போல் நைசாக பேசி ஏமாற்றி உள்ளார். அதுவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 55 வயதாகும் சுந்தரவல்லி என்பவர் இவர் உடல்நல பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுந்தரவல்லியை அவருடைய மருமகள் காஞ்சனா (30) என்பவர் உடன் இருந்து கவனித்து வந்தார். இந்தநிலையில், காஞ்சனாவிடம் 35 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி ஒருவர், தான் ஒரு டாக்டர் என கூறி அறிமுகமாகி உள்ளார். அப்போது, காஞ்சனா அவரிடம் தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, அந்த நபர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் என்ன பாதிப்பு என தெரிந்து விடும் என கூறி அவரை எக்ஸ்ரே பிரிவிற்கு அழைத்து சென்றிருக்கிறார். எக்ஸ்ரே மையத்திற்குள் நுழையும் முன்பு, ள் நகைகளை அணிய கூடாது. எனவே அதனை தன்னிடம் கொடுக்கும் படி கேட்டிருக்கிறாராம். டாக்டரிடம் கொடுத்தால் பத்திரமாக இருக்கும் என நினைத்த காஞ்சனா, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தாராம். பின்ன உள்ளே சென்ற காஞ்சனா எக்ஸ்ரே எடுத்து விட்டு வெளியே வந்து பார்த்த போது அந்த நபரை காணவில்லை. தங்கச்சங்கிலியுடன் அந்த நபர் ஓட்டம் எஸ்கேப் ஆனது து தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காஞ்சனா, உடனடிக அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மர்ம நபர் டாக்டரே இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். எக்ஸ்ரே எடுக்கும் போது கவனம் மக்களே..இப்படியும் சில திருடர்கள் உலா வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications