கள்ளக்காதலி நிஷாவை கொன்னுட்டு.. மணிப்பூர் ஓடிய தம்பதி.. ஏகே47 உடன் "தூக்கிய" நம்ம சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் நிஷா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனும், அவரது மனைவியும் தந்த வாக்குமூலம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து விட்டது.. இவர்கள் கைதாகி உள்ள நிலையில், தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. இந்நிலையில், இந்த தம்பதியை மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் எப்படி கைது செய்தார்கள் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா (38) என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிக் உத்தீன் லஸ்கர் (22), அவரது மனைவி பகவதி மாஜி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Nisha Murder Case

கூடுவாஞ்சேரி நிஷா

இவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், நிஷாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்தது தெரியவந்தது.. இதற்காக ஆகஸ்ட் 2-ம் தேதி நிஷாவுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து மணிக் உத்தீனும், அவரது மனைவி பகவதி மாஜியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிறகு சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று கூகுளில் தேடியிருக்கிறார்கள்.. உடலை வெளியே கொண்டு செல்ல முடியாததால், அதனை பல துண்டுகளாக வெட்டியுள்ளனர். சதைப்பகுதிகளை தனியாக பிரித்து பிரியாணி பாத்திரத்தில் வைத்ததுடன், உடல் அழுகாமல் இருப்பதற்காக 14 லிட்டர் வினிகர் உள்ளிட்ட ரசாயனங்களை பயன்படுத்தியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் உடல் பாகங்கள் விரைவில் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருக்க யூடியூப் வீடியோக்களை பார்த்து வினிகரை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை கள்ளக்காதலி

பிறகு எலும்புகளை தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து டிராலி பெட்டியில் திணித்துள்ளனர். அதிக எடை காரணமாக அதை தூக்கிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டாலும், ஆகஸ்ட் 3-ம் தேதி கூடுவாஞ்சேரியில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்துள்ளனர். அங்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறை அருகே டிராலி பெட்டியை வைத்துவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும், கொலை நடந்த கூடுவாஞ்சேரி வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிஷாவை எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்துக் காட்டச் செய்துள்ளனர். அங்கிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள் மற்றும் ஒரு கத்திரிக்கோலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் டிராலி பெட்டியை எங்கு வைத்தார்கள், எப்படி வைத்தார்கள் என்பதையும் நடித்துக் காட்டியிருக்கிறார்கள்.. பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் செப்டம்பர் 16-ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

மணிப்பூர் தப்பிய தம்பதி

ஆனால், இந்த கொலை வழக்கில் தம்பதி 2 பேரும் சிக்கியது எப்படி என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவலாகும்.. அதாவது நிஷாவை கொலை செய்ததுமே, மணிக் உத்தீன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார்.. இதனால் இவர்களை கூடுவாஞ்சேரி போலீஸார் வலைவீசி தேட ஆரம்பித்தனர்.

அப்போதுதான், நக்சல் ஆதிக்கம் நிறைந்த மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் மணிக் உத்தீன் பதுங்கியிருந்தது கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு சென்றபிறகுதான், அந்த பகுதி பாதுகாப்பானது இல்லை என்பது கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஏ.கே.47 துப்பாக்கி

இதனால் மணிப்பூர் போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகே, ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய மணிப்பூர் போலீஸ் பாதுகாப்புடன் தமிழக தனிப்படை போலீசார் மணிக் உத்தீன் பதுங்கியிருந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.. ஆனால், போலீசாரை பார்த்ததுமே, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ஆனால், போலீசார் மணிக் உத்தீனை பின்னாடியே துரத்தி செல்லவில்லை.. அதற்கு பதிலாக, மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் மூலம் மணிக் உத்தீனை தொடர்புகொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு பேச வைத்திருக்கிறார்கள்..

கெத்து சென்னை போலீஸ்

இந்த தகவலை நம்பிய மணிக் உத்தீன், உடனே அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்... அந்த பைக்கின் பதிவு எண்ணையும், அவர் செல்லும் ரூட்டையும் கண்டுபிடித்து மணிப்பூர் போலீசாரின் உதவியுடன் பின்னாடியே நம்முடைய தனிப்படை போலீசாரும் சென்றுள்ளனர்.. இறுதியில், சரியான இடத்தில் மோட்டார் சைக்கிளை சுற்றிவளைத்து மணிக் உத்தீனை கைது செய்தனர்.

அதன்பிறகு மணிக் உத்தீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், அவரது மனைவி பகவதி மாஜி பதுங்கியிருந்த இடத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.. அதற்கு பிறகே இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கன கச்சிதமாக கொலையை கொடூரமாக செய்துவிட்டு, தமிழகத்தை விட்டு வெகு தொலைவில் மணிப்பூரில் பதுங்கியிருந்த தம்பதியை, நம்முடைய போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கி வந்துள்ளனர்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+