சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுத்தமான காற்று .. மெட்ராஸ்தான் கெத்து! மும்பை, பெங்களூரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: அதிக வாகனங்கள் செல்லும் காற்று மாசடைந்த பெருநகரங்களின் பட்டியலில்.. சென்னையில்தான் காற்று மிகவும் சுத்தமாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மற்ற பெருநகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை இந்த இடத்தை பிடித்துள்ளது.

சென்னை பொதுவாக அதிக வெப்பநிலை கொண்ட நகரம். அதிக வெப்பநிலை இருந்தாலே தானாகவே காற்று மாசும் அதிகரிக்கும்.

வாகனங்கள் மற்றும் புழுதி காரணமாக காற்று மாசு அதிகமாக இருக்கும். ஆனால் இதை பொய்யாக்கி.. சென்னைதான் பெருநகரங்களிலேயே குறைந்த மாசு கொண்ட நகரம் என்ற பெயரை எடுத்துள்ளது.

 தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை போலீசாரின் செயலால் கிளம்பிய சர்ச்சை! மக்கள் கொந்தளிப்பு தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை போலீசாரின் செயலால் கிளம்பிய சர்ச்சை! மக்கள் கொந்தளிப்பு

அறிக்கை

அறிக்கை

National Clean Air Programme சார்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காற்று மாசு அளவு PM2.5 ஐ விட அதிகமாக உள்ள டாப் 10 நகரங்களில் சென்னையில்தான் காற்று மாசு மிக குறைவாக இருக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக காற்று மாசு அதிகமாக இருக்கும் பெரு நகரங்கள் மட்டும் ஒப்பீடு செய்யப்பட்டு, அந்த நகரங்களுக்கு இடையில் மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை

சென்னை

ஆக்ரா, பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜோத்பூர், மும்பை, லக்னோ மற்றும் பாட்னா ஆகிய நகரங்களுக்கு இடையில் மட்டும் இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் சென்னையில்தான் காற்று மாசு அளவு மிக குறைவாக உள்ளது. சென்னையில்தான் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட PM2.5 என்ற அளவில் உள்ளது. சென்னையில் இந்த அளவு மார்ச், மே மாதங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே PM2.5ஐ தாண்டி உள்ளது.

 மோசமான நகரங்கள்

மோசமான நகரங்கள்

மற்ற மாதங்களில் காற்று மாசு PM2.5 என்ற அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் மற்ற நகரங்களில் காற்று மாசு அளவு சில நாட்கள் PM10ஐ கூட தாண்டி உள்ளது. இது கடந்த 4 மாத டேட்டா ஆகும். கடந்த 4 மாதங்களில் சென்னையில்தான் மாசு மிக குறைவாக இருந்துள்ளது. கொல்கத்தாவில் சில நாட்கள் காற்று மாசு PM2.5 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

ஜூன் மாதம் மட்டும் ஆக்ரா, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் காற்று மாசு PM2.5 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. மொத்தமாக நான்கு மாதங்களில், ஒப்பீட்டளவில் பெருநகரங்களில் சென்னையில்தான் காற்று மாசு குறைவாக இருந்துள்ளது. சென்னைதான் குறைந்த காற்று மாசு கொண்ட நகரம் என்ற பட்டியலில் நான்கு மாதங்களாக முதலிடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களில் சென்னையில் மழை பெய்ததும் இப்படி மாசு குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

English summary
Chennai has the most clean air among the ten non attainment cities in India . அதிக வாகனங்கள் செல்லும் காற்று மாசடைந்த பெருநகரங்களின் பட்டியலில்.. சென்னையில்தான் காற்று மிகவும் சுத்தமாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X