நர்ஸ் உடைமாற்றும் அறையில் டாக்டர் சுப்பையா! சஸ்பெண்டை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

court

இந்த புகாரின் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது சுப்பையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளதாகவும், இது தொடர்பாக சுப்பையா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை எனவும் அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது எனக் கூறினார்.

பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனை என்பது கிளப் அல்ல, சர்ஜரி செய்யும் இடத்தில் இது போல நடந்து கொண்டார் என்றும் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இதுபோல புகார் உள்ளது என சுட்டிக் காட்டினார். உரிய விதிகளை பின்பற்றி சட்டத்துக்கு உட்பட்ட தான் அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதம் வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+