Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி என்சிசி முகாமில் பாலியல் தொல்லை! கிருஷ்ணகிரி பள்ளி முதல்வரின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் கை து செய்யப்பட்ட கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

court krishnagiri ncc

இந்த மனுக்கள் நீதிபதி பி.தனபால் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், சுமார் 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

காவல்துறை தரப்பில் அரசு தலைமை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சிறுமிகள் புகார் அளித்தபோது, அதனை முறையாக விசாரிக்காமல் ஆசிரியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் ஜாமீன் மனுக்கள் மீது அக்டோபர் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+