அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியின் முன்ஜாமீன் மனு முடித்து வைப்பு
சென்னை: முன் ஜாமீன் கோரி இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய ஓம்கார் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் கடந்த வாரம் ஆஜரானார்.
அப்போது, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க விருப்பம் இல்லை என தெரிவித்ததை அடுத்து, அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து அன்றைய தினம் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஓம்கார் பாலாஜியின் முன் ஜாமீன் மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, கடந்த 13ம் தேதி ஓம்கர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளதால், இந்த மனு செல்லாததாகி விட்டது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, முன் ஜாமீன் கோரி ஓம்கர் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications