வாடகை வீடுதாரரிடம் மோதல்! நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்
சென்னை: வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதற்காக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை போயஸ் தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அஜய் குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது வீட்டுக்கு வந்த நபர்கள் வீட்டை நடிகர் தனுஷ் வாங்கியுள்ளதால் உடனடியாக காலி செய்ய கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜய் குமார் லுனாவத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2024 ஜனவரி வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், காலி செய்ய மறுத்ததால் வீட்டின் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ய சொன்னது சட்ட விரோதம் என்பதால் வீட்டு விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மனுதாரருக்கும், தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த 31ம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் தனுஷ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications