திருவண்ணாமலை மலையே சிவன்தான்! அங்கு எப்படி கழிப்பிடம் கட்ட அனுமதிக்கலாம்? ஹைகோர்ட் நீதிபதி கண்டனம்
சென்னை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புனிதமான கிரிவல பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்-களும் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு வனத்துறை அதிகாரிகளும், நகராட்சி மற்றும் மின்துறை அதிகாரிகளுமே பொறுப்பு எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மலைப்பகுதி லே அவுட் ஆகிவிடும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, திருவண்ணாமலை மலையே சிவன் தான் எனவும், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்-களும் கட்ட அனுமதிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து, மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications