ஜாமீன் கேட்ட குன்றத்தூர் அபிராமி! ஒரே வரியில் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த குன்றத்தூர் அபிராமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

குழந்தைகளை கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமிக்கும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும் வகை சிறை தண்டனை என காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

court kundrathur abirami

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அபிராமி தனது மனுவில், தனக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க தகுதியான வழக்கு இது அல்ல என கூறி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர். பிரதான மேல்முறையீட்டு வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய்க்கும் அபிராமிக்கும் திருமணம் நடந்தது. விஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இதனால், குடும்பத்துடன் அவர் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் வாடகை வீடு எடுத்துத் தங்கினார்.

இவர்களுக்கு அஜய் (7), கார்னிகா (4) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், 2017, 2018ஆம் ஆண்டுகளில் அபிராமி மியூசிக்கலியில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, பணி அதிகம் இருந்ததால் விஜய் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். மறுநாள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்தது. இதனால், அருகில் உள்ள தனது தாய், தந்தை வீட்டிற்கு அபிராமி சென்றிருக்கலாம் எனக் கருதிய விஜய், தனது மாமியார் வீட்டிற்குச் சென்றார்.

அபிராமி எங்கே

அங்கு கேட்டபோது "அபிராமி இங்கு வரவில்லை" எனக் கூறினர். இதையடுத்து மீண்டும் வீட்டுக்கு வந்த விஜய், கதவு திறந்திருப்பதைப் பார்த்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவருடைய இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், இரு குழந்தைகளையும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்துக் குன்றத்தூர் போலீஸாரிடம் விஜய் புகார் அளித்திருந்தார்.

பிரேத பரிசோதனை

அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் குன்றத்தூர் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

விஜய், தனது குடும்பத்தினருடன் வீட்டருகே இருக்கும் பிரியாணிக் கடைக்குச் சென்று உணவு சாப்பிட்டு வருவாராம். தனது கணவர் இல்லாத நேரங்களிலும் கடைக்கு போன் செய்து பிரியாணியை ஆர்டர் செய்வாராம்.

பிரியாணி சுந்தரம்

அப்போது அபிராமியின் வீட்டிற்கு சுந்தரம் என்பவர்தான் பிரியாணியை நேரில் வந்து கொடுப்பது வழக்கமாம். இதனால் அடிக்கடி பிரியாணி வாங்கும் போது சுந்தரத்துடன் அபிராமி நெருங்கிப் பழகியதில் நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறிவிட்டது.

குழந்தைகளுக்கு பாலில் விஷம்

இதற்கு தடையாக இருந்த குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முடிவு செய்துள்ளார். இதற்காக சுந்தரம் வாங்கி கொடுத்த தூக்க மாத்திரைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு பாலில் கலந்து கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களைத் தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, சுந்தரத்துடன் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

நாகர்கோவில் கைது

இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவில் தப்பிச் சென்ற அபிராமியையும் மீனாட்சி சுந்தரத்தையும் போலீஸார் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். இந்த வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், சுந்தரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

சாகும் வரை சிறை

இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்து வந்தனர். இவர்களது வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் இருந்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி அபிராமிக்கும் சுந்தரத்திற்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+