தேர்தலின் போது சின்னம் ஒதுக்கீடு! தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தேர்தலின் போது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 1975-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 உட்பிரிவு 3ல், மத சின்னங்களை பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டு இந்த சட்டப்பிரிவில், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை மத சின்னங்களாகவோ, தேசிய சின்னங்களாகவோ கருதக் கூடாது என திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருக்கிறார்.
இது அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத் திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications