எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு! கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடவுளுக்குத்தான் வெளிச்சம் என வேதனை தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கில் கந்தசாமி, விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

sp velumani chennai highcourt

இந்த நிலையில் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கக் கடிதம் ஜூலை 28ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அதன் மீது பரிசீலனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கடந்த 27ஆம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து நீதிபதி, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறவே இத்தனை சிரமங்கள் என்றால் தொடர்ந்து என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+