கேலிக்கூத்து.. பச்சோந்தி.. ஓ.பன்னீர் செல்வம் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை கடுமையாக சாடிய நீதிபதி
சென்னை: ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்ட நிலையில்,
ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்திற்கென மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தபட்டது. இதனை தொடர்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.
இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தேனி மாவட்ட நீதிமன்றத்திலேயே ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று தேனி மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
ஆனால், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மதுரையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்ட நீதிமன்ற உத்தரவு ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து குற்றம்சாட்டபட்ட நபர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்தும் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரியும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012 ஆம் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை எந்த மேல் முறையீடும் செய்யாத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கபட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு நற்சான்று வழங்கியுள்ளது இது போல வேறு எங்காவது நடந்ததை கேள்விப்பட்டதுண்டா? என்று கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இது கேலிக்கூத்தானது என்று கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையை நீதிமன்றத்தில்தான் சமர்பிக்க வேண்டும் மாறாக சட்டசபையில் அளித்துள்ளது. சபாநாயகர் நீதிபதியை போல செயல்பட முடியாது எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்,
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம் எனவும் நீதிபதி சாடினார்.
மேலும், அதிகாரவரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் வழக்கை மாற்றியுள்ளதாகவும்,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிபுத் துறை செயல்படுவதாக கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை அரசியலில் இருந்து விலகி செயல்பட வேண்டும் என்றவர்,
2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது என்றும், ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை மீது குற்றம் சுமத்திய நீதிபதி, லஞ்ச ஒழுப்பு துறை கொண்டு வந்ததற்கான நோக்கமே சிதைந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கு நீதிமன்றங்களும் துணைபோவதாக கூறிய நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்ததாக அறிக்கை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை பிறகு புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும், ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர அனுமதி தந்ததை திரும்ப பெற்று கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், சபாநாயகர் தன்னை நீதிபதி போல் கருதி முடிவெடுக்க முடியாது எனவும் நீதிபதி கருத்து கூறினார். இதேபோல, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த போதும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளை மறு ஆய்வுக்கு எடுத்து விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது, முன்னாள் முதல்வரான ஒ. பன்னீர் செல்வம் மீதான வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications