பணி நீக்கப்பட்ட இந்திய பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை துணை தூதரகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் உதவியாளராக பணியாற்றிய செந்தில்குமாரி, 2018ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் செந்தில்குமாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால், மனுதாரர் ஒப்பந்த தொழிலாளர் எனக் கூறி, அவரது மனுவை நிராகரித்துள்ளது.
இதை எதிர்த்து செந்தில்குமாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு நிறைவேற்றிய தூதரக உறவு சட்டப்படி, தூதரகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இந்திய சமூக பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தாது எனக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, இந்தியாவின் சமூக பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தும் எனக் கூறி, செந்தில் குமாரியை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை துணை தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications