கட்டடங்களை இடிக்கும் வாகனங்களுக்கு நுழைவு வரியில் விலக்கு கோரிய இருவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு
சென்னை: நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களை இடிப்பது மற்றும் இடர்பாடுகளை அகற்றுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தனர்.

இறக்குமதி செய்யபட்ட இந்த வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க தடைக்கோரி கடந்த 2008ம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நுழைவு வரி செலுத்தக்கூடிய நிலையில் இல்லை என தெரிவிக்கபட்டது.
இதையடுத்து, கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்களின் இயக்குனர்களையும் செப்டம்பர் 6ம் தேதி ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த பிடிவாரண்ட் உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி அதனை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications