மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? குற்றபத்திரிகை நகல் கேட்ட கோர்ட்!
சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்து இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதிபரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டதா என்றும், பேராசிரியைக்கு எதிராக மதுரை காமராஜர் பல்கலைகழகம் என்ன நடவடிக்கை எடுத்தது, குற்ற வழக்கின் விசாரணை நிலை என்ன, 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில் நிர்மலாதேவி 2018-ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், சாட்சி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையின் நகலை தாக்கல் செய்ய அரசுக்கு தரப்பிற்கும், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக எடுக்கபட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மதுரை காமராஜர் பல்கலைகழக தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications