சகாயம் ஐஏஎஸ்ஸுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சகாயம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023- ஆம் ஆண்டு முதல் எந்த முன்னறிவிப்பும் இன்றி விலக்கிக் கொள்ளப்பட்டதாக சகாயம் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

sagayam

மேலும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர்நீதிமன்றம் நியமித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் சட்டவிரோத கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள என்னால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை.

அச்சுறுத்தல்கள் எனக்கு தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என அக்டோபர் 7ஆம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்குமாறு டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற தான், தனது 23 ஆண்டு காலத்தில் 22 முறை பணிமாறுதல் பெற்றுள்ளதாகவும் சகாயம் ஐஏஎஸ், தெரிவித்துள்ளார். மதுரையில் ஆட்சியராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை தடுத்தார். இதனால் அந்த ஆண்டு அரசுக்கு ரூ 16 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதையும் வெளிக் கொண்டு வந்தார். அப்போது முதலே அவர் இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி சொல்லி வருகிறார்.

சகாயம் ஐஏஎஸ் மிகவும் நேர்மையான அதிகாரியாவார். அவர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்போது மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்து வருகிறார். மேலும் இவர் விஜய் அரசை வெகுவாக பாராட்டியுள்ளார். விஜய் பதவியேற்ற போது அந்த விழாவில் கலந்து கொண்ட சகாயம், நான் தவறுகளை அனுமதிக்க மாட்டேன் என்று விஜய் இன்றைய தினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

இது ஒரு நல்ல அறிகுறி. இந்த பகிரங்க அறிவிப்பு, தமிழக மக்களிடத்தில் நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அது உருவாக்கியிருக்கிறது என்றார். சகாயம் தனது கட்சியில் சேர வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+