சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேதபாராயணம்: முந்தைய நிலையையே தொடருங்கள்.. வடகலை- தென்கலை பிரச்சினையில் உயர்நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: வடகலை தென்கலை பிரச்சனையில் ஒழுங்குப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி மறுத்து அறநிலையத் துறை உதவி ஆணையர் மே 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தடைவிதிக்கக் கோரியும் நாராயணன் என்பவர் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் வடகலை தென்கலை பிரிவினருக்கிடையேயான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

Chennai HC says about Sri Varadharajar temple vedha parayanam issue

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தினசரி பிரச்சினை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாக தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்தது பாரபட்சமானது என கூறி, அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு உள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.

21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர் 21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர்

English summary
Chennai HC says that last stand will be continued in Veda Parayanam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X