போதை மாஃபியா ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே ஜாபர் சாதிக்கும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-க்கு எதிராக, சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விசாரணைக்காக நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணைக்கு பின் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் முகமது சலீமை நேரில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் துவங்கி அதில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.
சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவரது கைது தேவையற்றது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி முகமது சலீம் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications