மறைந்த முன்னாள் அமைச்சரின் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 1991-96 ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த ஏ.எம்.பரமசிவன், அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோர் மீது 1997ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000ம் ஆண்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது, 2015ம் ஆண்டு மார்ச் மாதம், பரமசிவன் மரணமடைந்தார்.
இந்நிலையில், அவர் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு கடந்த 20 ஆண்டுக்ளுக்கும் மேல் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று தீர்ப்பளித்தார்.
மறைந்த அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications