ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு!
சென்னை: தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக கூறி ரூ.45 லட்சம் மோடி செய்தது தொடர்பாக சென்னை நீலாங்கரையை சேர்ந்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏப்ரல் 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் பீட்டர் அறிவரசன் (வயது 45). இவரது மனைவி பெயர் பினு கிறிஸ்டினா. இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர் அதேபோல் வங்கியில் நகைகளை ஏலம் எடுக்கும் முகவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீலாங்கரையை சேர்ந்த பல் மருத்துவர் சரவணன், பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதிக்கு எதிராக நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில், ''பீட்டர் அறிவரசன் குடும்ப நண்பர் போல் பழகி வந்தார். நெருக்கமாக பழகினார். இதனை பயன்படுத்தி என்னிடம் மோசடி செய்துவிட்டார். பழைய நகைகளை வாங்கி தருவதாக ரூ.45.60 லட்சத்தை பீட்டர் அறிவரசன் - பினு கிறிஸ்டினா தம்பதி வாங்கினார். ஆனால் நகை வாங்கி தரவில்லை. நீண்டகாலம் ஆனதால் பணத்தை திரும்ப கேட்டேன். அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் பழைய நகையை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த இவர்கள் மீது சட்டசப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரளித்தார். இதையடுத்து நீலாங்ரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான பீட்டர் அறிவரசன் மற்றும் பினு கிறிஸ்டினா தம்பதி மீது மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து பினு கிறிஸ்டினா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போலீசுக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதி குமாரப்பன் விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் அறிவரசன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தி நகரில் நகை கடை ஊழியர் ஒருவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக புகார் உள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications