சுற்றுலா பொருட்காட்சி டெண்டருக்கு தடை! ராமச்சந்திரன் அமைச்சராக பதவியேற்ற 2 நாட்களில் புது சோதனை!
சென்னை: சுற்றுலா பொருட்காட்சி டெண்டர் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் பதவியேற்று 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவருக்கு வந்த துறை ரீதியான சோதனையாக இது பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சுற்றுலா பொருட்காட்சி
47வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த அக்டோபர் 31ம் தேதி சுற்றுலாத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

ஃபன் வேர்ல்டு ரிசார்ட்ஸ்
இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டர் கோரி தங்களது நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், டெண்டர் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டதாக முறையிட்டுள்ளது.

டெண்டருக்கு தடை
இதனால் 47வது சுற்றுலா பொருட்காட்சி டெண்டருக்கு தடை விதி்க்க வேண்டும் எனவும், தங்கள் டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

புது சோதனை
சுற்றுலாத் துறை அமைச்சராக இதுவரை இருந்த மதிவேந்தன் நேற்று முன் தினம் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்று 2 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், இது துறை ரீதியாக அவருக்கு வந்த புது சோதனையாக பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேலும் ஒரு வழக்கு.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா? டென்ஷன் ஆன நீதிபதிகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications