ரூ 100 கோடி ஹிட் அடித்த "ஹிட் 3" கதையை திருடியதாக ஹைகோர்ட்டில் வழக்கு! நடிகர் நானி பதிலளிக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கதையை திருடி "ஹிட் 3" எனும் திரைப்படத்தை தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் நானி, இயக்குநர், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தென்காசியை சேர்ந்த விமல் என்பவர் தொடர்ந்தார். இது எந்த மாதிரியான வழக்கு என்பதை பார்க்கலாம்.

nani hit 3

தென்காசியை சேர்ந்தவர் விமல். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு தனது "ஏஜென்ட் 11" என்ற சைக்கோ கில்லர் கதையை திரைப்படமாக எடுக்க நடிகர் நானியின் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பினேன்.

அந்த கதையை மையமாக வைத்து நடிகர் நானி நடிப்பில், இயக்குநர் சைலேஷ் கொலனு "ஹிட் 3" எனும் படத்தை எடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான "ஹிட் 3" திரைப்படம் ரூ 100 கோடி வருவாய் ஈட்டியது.

தன் கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் அதில் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதம் தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவானது நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, முன்பு விசாரணைக்கு வந்தது.

அவர் "ஹிட் 3" படத்தின் ஹீரோ நானி, இயக்குநர் சைலேஷ், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இந்த படம் மே 1 ஆம் தேதி வெளியானது. நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் இந்த ஆண்டில் மூன்றாவது அதிக வசூல் செய்த தெலுங்கு படமாக உருவெடுத்தது. இந்த படத்தின் பட்ஜெட் என்பது ரூ 65 கோடியாகும். ஒரு கொடூரமான கொலை நடக்கிறது. அந்த கொலையை கண்டுபிடிக்க தமிழகத்தின் புதிய காவல் துறை அதிகாரி வருவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+