என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பிரச்சனை தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை போரட்டத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி , ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications