இளையராஜா புகைப்படம் பயன்படுத்த தடை – சோனி நிறுவனம் யூட்யூப் சேனல்களுக்கு நீதிமன்றம் செக்
சென்னை: காப்புரிமை விஷயத்தில் இளையராஜா எப்போதுமே ஸ்ட்ரிக்ட். நோ மீன்ஸ் நோ என்று பல பிரபலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இந்நிலையில் தன் புகைப்படங்களை பயன்படுத்தி வருமானம் பார்க்கும் சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், யூடியூப் சேனல்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் வணிக நோக்கில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காப்பி ரைட்ஸ் பிரச்சனை சினிமாவில் அதிகளவு உள்ளது. அதிலும் இசையில் காப்புரிமை பிரச்சனை காட்டு தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பயங்கர கறாராக உள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கி, நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் வரை பலருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இளையராஜா புகைப்படம் பயன்படுத்த தடை
இந்நிலையில் சோனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் மற்றும் சில யூடியூப் சேனல்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதற்கு தடை கேட்டு இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெயர் புகைப்படங்களை பயன்படுத்தினால் என்ன தவறு. அதனால் உங்கள் புகழ் பரவும் தானே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்
நோ மீன்ஸ் நோ
அதற்கு இளையராஜா தரப்பு, என் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள். எனவே தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பெயர், புனைப்பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, வருவாய் நோக்குடன் சமூகவலைதளங்களில் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
சோனி நிறுவனத்திற்கு செக்
மேலும் சோனி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்த உத்தரவு சோனி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்களுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் இந்த உத்தரவால் வழக்கம் போல இளையராஜா மீது நெட்டிசன்கள் விமர்சனங்களையும் வைத்துள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications