யூடியூப் சேனல்களை கண்ட்ரோல் பண்ணனும்.. வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட்!
சென்னை: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் போலீசாரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications