பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு.. விஜய் தரப்பில் வைத்த புதிய கோரிக்கை.. நிராகரித்த ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் விஜய் தரப்பில் வைத்த புதிய கோரிக்கைகளை ஏற்க மறுத்து உத்தரவிட்டதோடு வரும் 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.

Perambur constituency

விஜய் தரப்பில் வைத்த கோரிக்கை

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று ஆட்சியையும் பிடித்தது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், விஜய்யின் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி சேகர், அந்த தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இனிகோ இருதயராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், ஜி. மாசிலாமணி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையில், ''இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதற்காக விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர்.

நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

ஆனால், விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை வருகிற 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜய் தரப்பில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து, ஆர். சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையும் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கின் விசாரணையை அன்றைக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதி

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி சேகர் 66,650 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்து இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியை பொறுத்தவரை ஆதவ் அர்ஜுனா 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மோகன் 49,143 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+